இப்படி போனால் எப்புடி கல்லா கட்டுறது? சுவாரஸ்யம் இல்லாத பிக்பாஸ் சுத்த வேஸ்ட்!

திங்கள், 4 அக்டோபர் 2021 (15:42 IST)
பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருந்த பிக்பாஸ் தமிழ் சீசன் 5 நேற்று மாலை 6 மணிக்கு தொடங்கியது. இன்றைய முதல் ப்ரோமோவில் இந்த வார தலைவர் பதவிக்கு தகுதியானவர் என நினைக்கும் 5 பேர் தாங்களாகவே முன் வந்து எந்தெந்த டிபார்ட்மென்ட் தலைவர் என்பதை கூறுகிறார்.
 
அதில் முதல் ஆளாக ராஜூ ஜெயமோகன் நான் பாத்ரூம் கழுவுறேன் என கூற உடனே பின்னாடி இருந்த பிரியங்கா, இருக்குறதுலே அதான் ஈஸியான வேலை. நாங்க எல்லாம் ஒன்னானோம் பாத்ரூம் கழுவி Friend ஆனோம் என செம பஞ்சுடன் முதல் ப்ரோமோவை கலகலப்பா முடித்தார்.
 
இரண்டாவது ப்ரோமோவில் இசைவாணி பாடல் பாட அவருடன் சீனாக பாடல் பாடிய அபிஷேக்கை ஹலோ, அப்புறமா கூட்டிபோய் லவ் பண்ணு என கூறி ராஜு அவரை பங்கமாக கலாய்த்து இரண்டாவது ப்ரோமோவிலும் இடம் பிடித்தார். 
 
தற்போது மூன்றாவது ப்ரோமோவிலும் ராஜூவையே காட்டியுள்ளனர். விரல் வெட்டுன பேய் கதை கூற அங்கு இருக்குற சில டிக்கெட்டுகள் புரியாமலே கதை கேட்டுக்கொண்டிருக்குறது. ராஜூவை விஜய் டிவி வளர்த்து விட முயற்சிக்கிறது. அவர் மட்டும் தான் இந்த வீட்டில் இருக்கிறரா? என்ற கேள்வி பரவலாக எல்லோரும் எழுப்பியுள்ளனர். மேலும் இன்றைக்கு சண்டை சர்ச்சரவு என எதுவுமில்லாமல் எங்கள் வீட்டில் எல்லா நாளும் கார்த்திகை என்றவாறு கண்டெஸ்டெண்ட் எல்லோரும் ஜாலியாக கதை அளந்து கொண்டிருக்கின்றனர்.  

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்