முன் பதிவில் மாஸ் காட்டும் அமீர் கானின் ‘லால் சிங் சத்தா’ திரைப்படம்!

Webdunia
ஞாயிறு, 7 ஆகஸ்ட் 2022 (16:13 IST)
அமீர் கான் நடிப்பில் உருவாகியுள்ள லால் சிங் சத்தா திரைப்படம் ஆகஸ்ட் 11 ஆம் தேதி வெளியாக உள்ளது.

1994 ஆம் ஆண்டு ஹாலிவுட்டில் வெளியான பாரஸ்ட் கம்ப் படம் ஆஸ்கர்களை அள்ளியது. அதுமட்டுமில்லாமல் இன்று வரை உலக சினிமா ரசிகர்களின் விருப்பப் பட்டியலில் இடம்பெற்றுள்ள படமாக உள்ளது.  இந்த படத்திஅ 25 ஆண்டுகள் கழித்து பாலிவுட் நடிகர் அமீர்கான் லால் சிங் சட்டா எனும் பெயரில் ரீமேக் செய்துள்ளார்.

லால் சிங் சத்தா திரைப்படத்தின் ரிலீஸ் ஆகஸ்ட் 11 ஆம் தேதி என்று அறிவிக்கப்பட்டுள்ளது. அமீர்கான் நடிப்பில் நீண்ட இடைவெளிக்குப் பின் இந்த திரைப்படம் ரிலீஸ் ஆவதால் இந்தியா முழுவதும் நல்ல எதிர்பார்ப்பு நிலவுகிறது. இந்த படத்தை தமிழில் ரெட் ஜெயண்ட் மூவிஸ் நிறுவனம் வெளியிடுகிறது.

இந்நிலையில் லால் சிங் சத்தா திரைப்படம் இதுவரை முன்பதிவு மூலமாக மட்டும் சுமார் 8 கோடி ரூபாய் வசூல் செய்துள்ளது. இது பாசிட்டிவ்வான அம்சமாக பார்க்கப்படுகிறது. அதே நேரத்தில் அக்‌ஷய் குமாரின் ‘ரக்‌ஷா பந்தன்’ திரைப்படம் 3 கோடி ரூபாய் மட்டுமே வசூல் செய்துள்ளதாக சொல்லப்படுகிறது.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்