ஜிஎஸ்டி வரி ஏய்ப்பு: ஏ.ஆர்.ரஹ்மானுக்கு நோட்டீஸ்!

Webdunia
புதன், 28 செப்டம்பர் 2022 (15:18 IST)
இசையமைப்பாளர் ஏஆர் ரகுமான் ஜிஎஸ்டி வரி ஏய்ப்பு செய்ததாக தகவல் வெளியானதால் அவருக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளதாக ஜிஎஸ்டி ஆணையம் தெரிவித்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. 
 
இசையமைப்பாளர் ஏ ஆர் ரகுமான் புகழை களங்கப்படுத்துவதற்காகவே மத்திய அரசுக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளதாக குற்றம் சாட்டியுள்ள நிலையில் இதுகுறித்து ஜிஎஸ்டி ஆணையர் விளக்கமளித்துள்ளார் 
 
ஜிஎஸ்டி வரிஏய்ப்பு செய்ததற்கான ஆதாரங்கள் உள்ளது என்றும் அதனால்தான் இசையமைப்பாளர் ஏ ஆர் ரஹ்மானுக்கு நோட்டீஸ் அனுப்பப் பட்டதாகவும் அவர் தெரிவித்துள்ளார்
 
ரூ.6.79 கோடி வரி மற்றும் 6.79 கோடி அபராதம் செலுத்த கூறிய நோட்டீஸ் எதிர்த்த ஏஆர் ரஹ்மானின் மனுவை தள்ளுபடி செய்ய வேண்டும் என்றும் அவர் கேட்டுக் கொண்டுள்ளார் 
 
இசைப்புயல் ஏ ஆர் ரகுமான் ஜிஎஸ்டி வரி ஏய்ப்பு செய்ததாக நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது தமிழ் திரையுலகில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
 
 

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்