மறைந்த திரைப்பட பாடகர் பம்பா பாகியா உடலுக்கு ஏ.ஆர்.ரஹ்மான் அஞ்சலி!

வெள்ளி, 2 செப்டம்பர் 2022 (19:31 IST)
பிரபல திரைப்பட பாடகர்  பம்பா பாகியா இன்று காலை திடீரென மரணம் அடைந்த செய்தி திரையுலகினரை அதிர்ச்சிக்கு உள்ளாக்கியது
 
49 வயதான  பம்பா பாகியா உடல்நிலை காரணமாக சிகிச்சை பெற்று வந்த நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்ததாக கூறப்பட்டது. இதை அடுத்து திரையுலகினர் பலரும் சமூக வலைதளங்களில் அவரது மறைவுக்கு இரங்கல் தெரிவித்தனர் 
 
பொன்னியின் செல்வன் திரைப்படத்தில் இடம்பெற்ற பொன்னி நதி என்ற பாடலை  பம்பா பாகியா ஏஆர் ரஹ்மானுடன் இணைந்து பாடியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது 
 
இந்நிலையில் மறைந்த பிரபல பாடகர்  பம்பா பாகியா உடலுக்கு ஏ ஆர் ரகுமான் நேரில் அஞ்சலி செய்துள்ளார். இது குறித்த புகைப்படங்கள் இணையதளங்களில் வைரலாகி வருகிறது
 
 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்