முத்தக் காட்சியில் நடிக்க மறுத்த பிரபல நடிகை

Webdunia
வெள்ளி, 20 அக்டோபர் 2023 (13:52 IST)
தமிழ் சினிமாவின் பிரபல நடிகை மனிஷா யாதவ். இவர் கடந்த 2012 ஆம் ஆண்டு பாலாஜி சக்திவேல் இயக்கத்தில், வழக்கு எண் 18/9 என்ற படத்தின் மூலம் சினிமாவில் அறிமுகமானார்.

அதன்பின்னர், தூனிகா தூனியா, ஆதலால் காதல் செய்வீர், ஜன்னல் ஓரம், பட்டைய கெளப்பனும் பாண்டியா, ஒரு குப்பை கதை உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ளார்.

இந்த நிலையில், இளையராஜா இசையில் உருவாகிவரும் பள்ளி பருவக் காதல் படம் நினைவெல்லாம் நீயடா. இப்படத்தை ஆதிராஜான் இயக்கி வருகிறார்.பிரஜின் ஹீரோவாக நடிக்கும்  இப்படத்தில் மனிஷா ஹீரோயினாக நடிக்கிறார். ஆனால் இப்படத்தில் முத்தக் காட்சியில் நடிக்க மாட்டேன் என்று கூறியதால் இயக்குனருக்கும் மனிஷாவுக்கும் இடையில் வாக்குவாதம் ஏற்பட்டதாகக் கூறப்படுகிறது.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்