லஞ்சம் விவகாரம்: விஷால், சமுத்திரகனியை விசாரிக்க வேண்டும்- புளூ சட்டை மாறன்

வெள்ளி, 20 அக்டோபர் 2023 (13:26 IST)
விஷால் நடித்த மார்க் ஆண்டனி என்ற திரைப்படத்தின் ஹிந்தி பதிப்பை சென்சார் செய்வதற்கு அதிகாரிகள் லஞ்சம் வாங்கியதாக குற்றம் சாட்டப்பட்டது. இது குறித்து விஷால் அளித்த புகாரின் அடிப்படையில் அதிரடியாக நடவடிக்கை எடுத்து சென்சார் அதிகாரிகள் சஸ்பெண்ட் செய்யப்பட்டனர்.
 

இந்த நிலையில்  தமிழ் உள்பட பிற மொழி திரைப்படங்கள் ஹிந்தியில் டப்பிங் செய்து வெளியிடுகையில் அதனை தமிழ்நாட்டிலேயே சென்சார் செய்து கொள்ளலாம் என சென்சார் அறிவித்துள்ளது.

இந்த  நிலையில், மார்க் ஆண்டனி படத்தை இந்தியில் வெளியிடுவதற்கு சென்சார்போர்டு அதிகாரிகள், தரகர்கள் மூலம் லஞ்சம் பெற்ற விவகாரத்தில், நடிகர் விஷாலின் உதவியாளர் ஹரி கிருஷ்ணனிட்ன சிபிஐ அதிகாரிகள் விசாரணை நடத்தியுள்ளனர்.

இந்த விவகாரம் பற்றி சினிமா விமர்சகர் புளூ சட்டை மாறன் தன் வலைதள பக்கத்தில்,

‘’லஞ்சம் பெறுவதற்கு இணையான குற்றம் லஞ்சம் தருவது.

மார்க் ஆண்டனி படத்துக்காக லஞ்சம் தந்தவர்களையும், தர தூண்டியவர்களையும் கைது செய்ய வேண்டும். விஷாலையும் விசாரிக்க வேண்டும். அவர்தான் இதுபற்றி பொதுதளத்தில் எழுதினார் (ட்வீட்).

'அப்பா' படத்திற்கு வரிவிலக்கு பெற பணம் தந்தேன் என மீடியா முன்பு ஒப்புக்கொண்ட சமுத்திரக்கனியையும் உடனே விசாரிக்க வேண்டும்’’ என்று தெரிவித்துள்ளார்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்