பொன்னியின் செல்வன் கதையை மணிரத்னம் எங்க கம்பெனிக்குதான் சொன்னார்- கமல் பகிர்ந்த சீக்ரெட்!

vinoth

வெள்ளி, 18 ஏப்ரல் 2025 (15:12 IST)
பொன்னியின் செல்வன் படத்தின் மூலமாக பல ஆண்டுகளுக்குப் பிறகு கமர்ஷியல் வெற்றியைப் பெற்ற இயக்குனர் மணிரத்னம் அடுத்து இப்போது கமல்ஹாசனை வைத்து தக் லைஃப் படத்தை இயக்ககியுள்ளார். இந்த படத்தில் கமல்ஹாசனுடன் சிம்பு, திரிஷா, ஜோஜு ஜார்ஜ், கௌதம் கார்த்திக், அசோக் செல்வன் மற்றும் ஐஸ்வர்யா லஷ்மி உள்ளிட்டோர் நடிக்கின்றனர்.

ஏ ஆர் ரஹ்மான் இசையமைக்கிறார். கமல்ஹாசன், உதயநிதி ஸ்டாலின் மற்றும் மணிரத்னம் ஆகிய மூவரும் இணைந்து தயாரிக்கின்றனர். படத்தின் ஷூட்டிங் நிறைவடைந்து போஸ்ட் புரொடக்‌ஷன் பணிகள் விறுவிறுப்பாக நடந்து வருகின்றன. படம் ஜூன் மாதம் 5 ஆம் தேதி ரிலீஸாகவுள்ளது.

இன்று இந்த படத்தின் முதல் தனிப்பாடல் ‘ஜிக்குச்சன்’ வெளியாகியுள்ளது. ரஹ்மான் இசையில் பாடலின் வரிகளை கமல்ஹாசன் எழுதியுள்ளார். இந்த பாடல்  வெளியீட்டு நிகழ்ச்சியில் படக்குழுவினர் அனைவரும் கலந்துகொண்டனர். அப்போது பத்திரிக்கையாளர்கள் மணிரத்னத்திடம் “நீங்கள் ஏன் இதற்கு முன்பு ராஜ்கமல் பிலிம்ஸ் நிறுவனத்துக்காக படம் இயக்கவில்லை?” எனக் கேள்வி எழுப்பினர்.

அதற்கு மணிரத்னம் “அவர்கள் என்னை அழைக்கவில்லை” என சொல்ல கமல்ஹாசன் குறுக்கிட்டு “கதை சொன்னாரு. இது எங்க நிறுவனத்துக்குக் கட்டுப்படி ஆகாதுன்னு நாங்கள்தான் கையை மசாஜ் செய்துகொண்டு அனுப்பிவிட்டோம். அந்த படம்தான் பொன்னியின் செல்வன்” எனக் கூறியுள்ளார்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்