நிர்வாணமாக வலம்வந்து பெண்ணுக்கு பாலியல் தொல்லை கொடுத்த திரைக்கதை எழுத்தாளர்!!

Webdunia
புதன், 29 மார்ச் 2017 (13:03 IST)
நிர்வாணமாக வந்து பெண்ணுக்கு பாலியல் தொல்லை கொடுத்த மலையாள திரைக்கதை எழுத்தாளருக்கு நீதிமன்றம் 3 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்துள்ளது. 


 
 
மம்மூட்டியின் மகன் துல்கர் சல்மான் நடித்த நீலாகாஷம் பச்சக்கடல் மற்றும் சுவன்ன பூமி படத்திற்கு திரைக்கதை எழுதியவர் ஹஷிர் முகமது.  
 
இவர் கடந்த 2014 ஆம் ஆண்டு தனது அபார்ட்மென்ட் வளாகத்தில் நிர்வாணமாக சுற்றி குடியிருப்பில் வசிக்கும் பெண்ணுக்கு பாலியல் தொல்லை கொடுத்தார்.
 
இதனையடுத்து அவர் போலீஸாரால் கைது செய்யப்பட்டார். கஞ்சா அடித்து போதையில் இருந்ததால் இவ்வாறு செயல் பட்டார் என தெரிவிக்கப்பட்டிருந்தது. 
 
இந்த வழக்கு எர்ணாகுளம் நீதிமன்றத்தில் மூன்று ஆண்டுகளாக நடந்து வந்தது. இந்நிலையில் ஹஷிர் முகமதுக்கு 3 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்துள்ளது.
அடுத்த கட்டுரையில்