"ஒவ்வொரு மனுஷனுக்கும் ஒவ்வொரு ஃபீலிங்க்ஸ்! சிவா மனசுல சக்தி!

Webdunia
புதன், 13 பிப்ரவரி 2019 (18:05 IST)
சிவா மனசுல சக்தி படம் வெளியாகி இன்றுடன் 10 ஆண்டுகள் ஆகிவிட்டது. 2009ம் ஆண்டு இதே பிப்ரவரி 13ம் தேதி தான் சிவா மனசுல சக்தி படம் வெளியானது. 


 
ஒரு படம் என்றால் இப்படித்தான் இருக்கும் என்ற வரையறையை உடைத்து எறிந்தார் இயக்குனர் ராஜேஸ்,
 
வில்லன்களுடன் மெகா சண்டை காட்சிகள் இல்லை. யாரையும் சீட்டின் நுணியில் உட்கார வைக்கும் அளவுக்கு சிந்திக்கவைக்கவில்லை.  சிரிப்பு மட்டுமே படம், நோ லாஜிக் என்று புதிய பரிமாணத்தில் தமிழ் சினிமாவில் வந்த படம் சிவா மனசுல சக்தி.  இந்த படத்தில்  ஜீவா, அனுயா, சந்தானம்,  ஊர்வசி, உள்பட பலர் நடித்திருந்தனர். ஜீவா, அனுயா இருவரும் ரயிலில் சந்தித்துக்கொண்ட பின்பு, நகரும் ஒவ்வொரு காட்சியும் காதலன், காதலியிடையே இருக்கும் நிஜ ஊடல் மற்றும் மோதலைப் பால் இருந்ததால் தமிழ் ரசிகர்களால் வெகுவாக பாராட்டப்பட்டது.
 
இதில் நடித்த பின்பு தான் சந்தானம் டாப் லெவல் காமெடியனாக மாறினார்.   "ஒவ்வொரு மனுஷனுக்கும் ஒவ்வொரு ஃபீலிங்க்ஸ்"... "அவ போய் ஆறு மாசமாச்சு" என சந்தானம் கொடுத்த டைமிங் காமெடிகள் படத்துக்கு பக்கா மாஸ். இந்த படத்தில் ஜீவாவுடன சேர்ந்து அவர் காமெடி செய்யவில்லை. நிஜ நண்பனைப்போல் நையாண்டி செய்து நடித்திருப்பார். இந்த படத்தில் ஜீவா "மச்சி... இன்னொரு குவாட்டர் கொடேன்!" என்று சந்தானத்தை பார்த்து கேட்பார். நாம் ஜீவாவிட கேட்பது   "மச்சி... இன்னொரு எஸ்எம்எஸ் கொடேன்!"..
 
 
யுவனின் பாடல்கள் எல்லாமே சூப்பராக இருந்தது. பின்னணி இசை அதிஅற்புத. குறிப்பாக ஒரு கல் ஒரு கண்ணாடி’.  பாடல் செம்ம செம்ம... 
 
காதலை கொண்டாட காதலர் தினத்தில் இப்போது எத்தனையோ படங்கள் வரலாம், வந்திருக்கலாம். 2009இல் வந்த சிவா மனசுல சக்தி மாதிரி படம் இன்னொன்று வருவது தமிழ் சினிமாவில் அத்தி பூ பூப்பது போன்றது.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்