என்னை கிரிக்கெட் விளையாட்டில் சேர்த்துக் கொள்வார்களா? பிரபல ஓட்டப்பந்தய வீரர் கேள்வி

Webdunia
புதன், 4 டிசம்பர் 2019 (22:15 IST)
பிரபல ஓட்டப்பந்தய வீரர் உசைன் போல்ட் ஓட்டப்பந்தய விளையாட்டிலிருந்து ஓய்வு பெற்றபின் கால்பந்து விளையாடினர் என்பது தெரிந்ததே. அதேபோல் தற்போது பிரபலமாக இருக்கும் ஓட்டப்பந்தய வீரர் யோகன் பிளேக் என்பவர் ஓய்வுக்கு பின்னர் கிரிக்கெட் விளையாட ஆசைப்படுவதாக அவர் பேட்டி ஒன்றில் தெரிவித்துள்ளார் 
 
யோகன் பிளேக் தற்போது நிகழ்ச்சி ஒன்றுக்காக இந்தியா வந்தபோது செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது தனக்கு ஓட்டப்பந்தயத்தில் விருப்பம் இருந்தாலும் இன்னும் 2 ஆண்டுகளில் அந்த விளையாட்டில் இருந்து ஓய்வு பெறப் போவதாகவும் ஓய்வுக்குப்பின் கிரிக்கெட் விளையாட தான் ஆசைப்படுவதாகவும் தெரிவித்தார்
 
மேலும் தான் மேற்கு இந்திய தீவுகள் நாடுகளைச் சேர்ந்தவராக இருந்தாலும் அந்நாட்டு அணியில் இணைந்து கிரிக்கெட் விளையாட விரும்பவில்லை என்றும், இந்தியாவில் உள்ள ஐபிஎல் அணிகள் ஏதாவது ஒரு அணியில் விளையாட தனக்கு விருப்பம் என்றும் தெரிவித்துள்ளார் 
 
குறிப்பாக ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அல்லது கொல்கத்தா அணிக்காக விளையாட வாய்ப்பு கிடைத்தால் மிகுந்த சந்தோஷமாக இருக்கும் என்றும், தான் விராட் கோலியின் தீவிர ரசிகர் என்பதால் பெங்களூர் அணியில் வாய்ப்பு கேட்க திட்டமிட்டு உள்ளதாகவும் அவர் கூறியுள்ளார் 
 
இரண்டு ஆண்டுகள் கழித்து அவர் ஓய்வுக்குப் பின் இந்தியா வந்தால் பெங்களூர் அணியினர் அவரை சேர்த்துக் கொள்வார்கள் என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்