ஐபிஎல் 2020 போட்டியில் இருந்து திடீரென விலகிய 2 முன்னணி வீரர்கள்

செவ்வாய், 3 டிசம்பர் 2019 (08:17 IST)
ஒவ்வொரு ஆண்டும் ஐபிஎல் கிரிக்கெட் போட்டி என்ற கிரிக்கெட் திருவிழா இந்தியாவில் நடைபெற்று வரும் நிலையில் இந்த போட்டிகளில் கலந்து கொள்ள உலகின் முன்னணி வீரர்கள் பலர் மிகுந்த ஆர்வத்துடன் இருந்து வருகிறார்கள் என்பது தெரிந்ததே
 
இந்த நிலையில் 2020 ஆம் ஆண்டு நடைபெற உள்ள ஐபிஎல் போட்டியில் இருந்து இரண்டு முக்கிய வீரர்கள் விலகி உள்ளதாக உறுதி செய்யப்பட்ட தகவல்கள் வெளிவந்துள்ளது.
 
ஆஸ்திரேலியாவின் முன்னணி பந்துவீச்சாளர் மைக்கேல் ஸ்டார்க் கடந்த 2015ஆம் ஆண்டு ராயல் சேலஞ்ச் பெங்களூர் அணியில் விளையாடினார். அதன்பின்னர் 2018 ஆம் ஆண்டு அவரை கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி 9.4 கோடி ரூபாய்க்கு ஏலம் எடுக்கப்பட்டார். இருப்பினும் அந்த தொடரில் அவருக்கு காயம் ஏற்பட்டதால் அவர் போட்டிகளில் பங்கேற்கவில்லை 
 
இந்த நிலையில் 2019ஆம் ஆண்டு அவர் உலக கோப்பை கிரிக்கெட் போட்டியை எதிர்கொள்ள இருக்கும் காரணமாக ஐபிஎல் போட்டியில் விளையாட வில்லை. இதே போல் இந்த ஆண்டும் அவர் ஐபிஎல் போட்டியில் கலந்து கொள்ளவில்லை என்று தகவல்கள் வெளிவந்துள்ளது
 
இதேபோல் ஐபிஎல் போட்டியில் இருந்து விலகிய இன்னொரு முக்கிய வீரர் இங்கிலாந்து அணியின் கேப்டன் ஜோ ரூட் ஆவார். இரண்டு முன்னணி வீரர்கள் ஐபிஎல் போட்டிகளில் இருந்து விலகி உள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்