மகளிர் உலக கோப்பை செஸ் சாம்பியன் ஆனார் திவ்யா தேஷ்முக்.. குவியும் வாழ்த்துக்கள்..!

Mahendran

திங்கள், 28 ஜூலை 2025 (17:22 IST)
ஜார்ஜியாவில் நடைபெற்ற மகளிர் உலகக் கோப்பை செஸ் போட்டியில், இந்தியாவின் இளம் வீராங்கனை திவ்யா தேஷ்முக் சாம்பியன் பட்டம் வென்றார். இறுதிப் போட்டியில் சக இந்திய வீராங்கனை கோனெரு ஹம்பியை வீழ்த்தி திவ்யா இந்த சாதனையைப் படைத்துள்ளார்.
 
இந்த உலகக் கோப்பை செஸ் இறுதிச் சுற்றில், முதன்முறையாக திவ்யா தேஷ்முக் மற்றும் கோனெரு ஹம்பி ஆகீய இரண்டு இந்திய பெண் வீராங்கனைகள் மோதியது இந்திய செஸ் வரலாற்றில் முக்கியத்துவம் வாய்ந்தது. இரண்டு சுற்று போட்டிகள் டிரா ஆன நிலையில், இன்று நடைபெற்ற டை-பிரேக்கர் சுற்றில் 19 வயதான திவ்யா தேஷ்முக் வெற்றி பெற்று சாம்பியன் ஆனார். கோனெரு ஹம்பி வெள்ளிப் பதக்கத்தை பெற்றார்.
 
செஸ் உலகக் கோப்பை இறுதிப் போட்டியில் முதன்முறையாக சாம்பியன் பட்டம் வென்ற இந்திய பெண் வீராங்கனை என்ற பெருமையை திவ்யா தேஷ்முக் பெற்றுள்ளார். இது இந்திய செஸ் விளையாட்டின் வளர்ச்சிக்கு ஒரு சிறந்த எடுத்துக்காட்டு.
 

Edited by Mahendran

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்