அதன்படி களமிறங்கிய இந்திய அணி ஆரம்பத்தில் இருந்தே நிதானமான ஆட்டத்தை வெளிப்படுத்தியது. ஜெய்ஸ்வால் 58 ரன்களும் கே எல் ராகுல் 46 ரன்களும் சேர்த்து ஆட்டமிழந்தனர். மூன்றாவது பேட்ஸ்மேனாகக் களமிறங்கிய சாய் சுதர்சன் 61 ரன்கள் சேர்த்து ஆட்டமிழந்தார். பெரிதும் எதிர்பாக்கப்பட்ட கேப்டன் கில் 12 ரன்களில் ஆட்டமிழந்து ஏமாற்றினார்.
இந்த போட்டியில் இந்திய அணியின் துணைக்கேப்டனும் அதிரடி பேட்ஸ்மேனுமான ரிஷப் பண்ட் காலில் அடிபட்டு ரிட்டையர்ட் ஹர்ட் முறையில் வெளியேறினார். இதையடுத்து அவருக்கு மருத்துவப் பரிசோதனைகள் நடந்து கண்காணிக்கப்பட்டு வரும் நிலையில் அவர் காயம் காரணமாக இந்த போட்டியில் இருந்து வெளியேறலாம் என தகவல்கள் வெளியாகியுள்ளன.