அதிக ரன்கள்… அதிக விக்கெட்கள்… இரண்டிலும் கலக்கிய கேப்டன்கள்!

vinoth

திங்கள், 28 ஜூலை 2025 (14:02 IST)
இந்திய மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான நான்காவது டெஸ்ட் போட்டி ‘டெஸ்ட் போட்டிக்கே உரிய அம்சத்தோடு’ நடந்து சமனில் முடிந்துள்ளது. இதனால் தற்போது 2-1 என்ற கணக்கில் இங்கிலாந்து அணி முன்னிலையில் உள்ளது. இந்திய அணித் தொடரை சமன் செய்ய எப்படியாவது ஐந்தாவது போட்டியை வென்றாக வேண்டும். இல்லையென்றால் தொடரை இழக்க வேண்டியிருக்கும்.

இதுவரை நான்கு போட்டிகள் முடிந்துள்ள நிலையில் இரு அணியின் கேப்டன்களும் முன்மாதிரியாக இருந்து அணியை வழிநடத்தியுள்ளார்கள். இந்த தொடரில் அதிக ரன்கள் சேர்த்த வீரராக ஷுப்மன் கில் 722 ரன்கள் சேர்த்து முதலிடத்தில் உள்ளார்.

அதே போல அதிக விக்கெட்கள் வீழ்த்திய பவுலர்கள் வரிசையில் இங்கிலாந்து கேப்டன் பென் ஸ்டோக்ஸ் 17 விக்கெட்களோடு முதலிடத்தில் உள்ளார்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்