முதல் ஓவரிலேயே 2 விக்கெட்டை இழந்த இந்தியா.. சுதாரித்து விளையாடும் கே.எல்.ராகுல், கில்..!

Siva

ஞாயிறு, 27 ஜூலை 2025 (08:35 IST)
இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான மூன்றாவது டெஸ்ட் போட்டி மான்செஸ்டர் நகரில் பரபரப்பாக நடைபெற்று வருகிறது. இந்த போட்டியில் இங்கிலாந்து அணி தனது முதல் இன்னிங்ஸில் 669 ரன்கள் என்ற இமாலய ஸ்கோரை எடுத்து, இந்திய அணிக்கு கடும் நெருக்கடியை ஏற்படுத்தியுள்ளது. இங்கிலாந்து அணியின் நட்சத்திர பேட்ஸ்மேன் ஜோ ரூட் 150 ரன்களும், கேப்டன் பென் ஸ்டோக்ஸ் 141 ரன்களும் குவித்து அபாரமாக விளையாடி சதமடித்தனர்.
 
இதனை அடுத்து, இந்தியா தனது 2வது இன்னிங்ஸைத் தொடங்கியது. ஆனால், முதல் ஓவரிலேயே இந்திய அணிக்கு அதிர்ச்சி காத்திருந்தது. நான்காவது பந்தில் ஜெயஸ்வால் மற்றும் ஐந்தாவது பந்தில் சாய் சுதர்சன் ஆகியோர் ரன் ஏதும் எடுக்காமல் அவுட்டாகி, ரசிகர்களை ஏமாற்றினர்.
 
இருப்பினும், இந்திய அணியின் நம்பிக்கை நட்சத்திரமான கே.எல். ராகுல் பொறுப்புடன் விளையாடி, மறுமுனையில் சுப்மன் கில்லுடன் இணைந்து அணியை சரிவிலிருந்து மீட்டுள்ளார். கே.எல். ராகுல் 87 ரன்களுடனும், சுப்மன் கில் 78 ரன்களுடனும் களத்தில் உள்ளனர்.
 
நேற்றைய ஆட்ட நேரம் முடிவில், இந்திய அணி 2 விக்கெட் இழப்பிற்கு 174 ரன்கள் எடுத்துள்ளது. இந்திய அணி இன்னிங்ஸ் தோல்வியை தவிர்க்க இன்னும் 137 ரன்கள் எடுக்க வேண்டும். இந்த ரன்களை எடுத்துவிட்டால், இந்திய அணி இன்னிங்ஸ் தோல்வியிலிருந்து தப்பிப்பதுடன், இன்று முழுவதும் ஆட்டமிழக்காமல் இருந்தால் போட்டி டிரா ஆகும் என்பது குறிப்பிடத்தக்கது. ன்றைய ஆட்டத்தில் கே.எல். ராகுல் மற்றும் சுப்மன் கில்லின் ஆட்டம் இந்திய அணிக்கு மிக முக்கியமானது.
 
 
Edited by Siva

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்