தற்போது அவர்கள் ஒருநாள் போட்டிகளில் மட்டும் விளையாடி வருகின்றனர். இருவரும் 2027 ஆம் ஆண்டு உலகக் கோப்பை தொடரில் விளையாடிவிட்டு ஓய்வை அறிவிப்பார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. தற்போது விராட் கோலிக்கு 36 வயதும், ரோஹித் ஷர்மாவுக்கு 37 வயதும் ஆகிறது. ஆனால் அதற்கான சாத்தியக் கூறுகள் என்ன என்பது குறித்து முன்னாள் வீரர்கள் பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
இந்நிலையில் முன்னாள் ஹர்பஜன் சிங் அவர்கள் இருவரும் உலகக் கோப்பையில் விளையாடுவது குறித்து பேசியுள்ளார். அதில் “உலகக் கோப்பை அருகில் இல்லை. அதற்கு இன்னும் நீண்ட காலம் உள்ளது. நீங்கள் எவ்வளவு பெரிய வீரராக இருந்தாலும் தொடர்ச்சியாக விளையாடாவிட்டால் கடினமாகிவிடும். நீங்கள் தொடர்ந்து விளையாடாவிட்டால் விளையாட்டு முன்னே சென்றுவிடும். நீங்கள் பின்தங்கி விடுவீர்கள்” என சூசகமாக பேசியுள்ளார். இதன் மூலம் அவர் ரோஹித்- கோலி உலகக் கோப்பை தொடர்வரை விளையாடுவது அரிது என்பதை வெளிப்படுத்தியுள்ளார்.