இந்த ஆண்டு ஆசியக் கோப்பை தொடர் டி 20 வடிவில் நடக்கவுள்ளதாக சொல்லப்படுகிறது. ஏனென்றால் அடுத்த ஆண்டு டி 20 உலகக் கோப்பை தொடர் வருகிறது. இதனால் இந்த ஆண்டு கோலி மற்றும் ரோஹித் ஆகியோர் ஆசியக் கோப்பை தொடரில் விளையாட முடியாத சூழல் உருவாகியுள்ளது. அவர்கள் சமீபத்தில் டி 20 போட்டிகளில் இருந்து ஓய்வு பெற்றனர்.
இந்த ஆண்டு ஆசியக் கோப்பை தொடர் டி 20 வடிவில் நடக்கவுள்ளதாக சொல்லப்படுகிறது. ஏனென்றால் அடுத்த ஆண்டு டி 20 உலகக் கோப்பை தொடர் வருகிறது. இந்நிலையில் இந்த தொடரில் இந்தியா மற்றும் பாகிஸ்தான் ஆகிய அணிகள் ஒரே குழுவில் இடம்பெற்றுள்ளன. சமீபத்தில் நடந்த பஹல்ஹாம் தாக்குதல் மற்றும் அதையொட்டி இரு நாடுகளிலும் நடந்த தாக்குதல்கள் ஆகியவற்றால் இரு அணிகளும் இனிமேல் கிரிக்கெட் விளையாடக் கூடாது என்று கருத்துகள் எழுந்துள்ளன.
இது பற்றி பேசியுள்ள இந்திய அணியின் முன்னாள் கேப்டன் சௌரவ் கங்குலி “பஹல்ஹாம் தாக்குதல்கள் போன்ற பயங்கரவாத நடவடிக்கைகள் கண்டிக்கப்படவேண்டியவை. அவை நிறுத்தப்பட வேண்டும். அத்ற்கு எதிராக இந்தியா வலுவான நிலையை எடுத்தது. ஆனால் விளையாட்டு விளையாடப்பட வேண்டும்” எனக் கூறி இரு அணிகளும் விளையாடுவது குறித்து நேர்மறையானக் கருத்தை வெளிப்படுத்தியுள்ளார்.