மகளிர் ஐபிஎல்: குஜராத்துக்கு அபார வெற்றி.. பெங்களூர் அணி பரிதாபம்..!

Webdunia
வியாழன், 9 மார்ச் 2023 (07:33 IST)
கடந்த சில நாட்களாக மகளிர் ஐபிஎல் போட்டிகள் நடைபெற்று வரும் நிலையில் நேற்று நடந்த போட்டியில் குஜராத் மற்றும் பெங்களூர் அணிகள் மோதின. நேற்றைய போட்டியில் முதலில் பேட்டிங் செய்த குஜராத் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 7 விக்கெட்ட்டுகளை இழந்து 201 ரன்கள் எடுத்தது என்பது குறிப்பிடத்தக்கது. சோபியா 65 ரன்களும் தியோல் 67 ரன்களும்  எடுத்தனர்
 
இந்த நிலையில் 202 ரன்கள் என்ற இமாலய இலக்கை நோக்கி விளையாடிய பெங்களூர் அணி 20 ஓவர்களில் 6 விக்கெட் களை விழுந்து 190 ரன்கள் மட்டுமே எடுத்ததால் குஜராத் அணி 11 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது என்பது குறிப்பிடத்தக்கது
 
இந்த வெற்றியை அடுத்து குஜராத் அணி புள்ளி பட்டியலில் இரண்டு புள்ளிகள் எடுத்து நான்காவது இடத்தில் உள்ளது என்பதும் பெங்களூர் அணி மூன்று போட்டிகளில் விளையாடி மூன்றிலும் தோல்வி அடைந்து கடைசி இடத்தில் உள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.
 
Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்