இந்தியா-ஆஸ்திரேலியா 4வது டெஸ்ட்: டாஸ் போடுகிறார் பிரதமர் மோடி..!

Webdunia
புதன், 8 மார்ச் 2023 (16:48 IST)
இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கிடையே தற்போது டெஸ்ட் தொடர் போட்டி நடைபெற்று வருகிறது என்பதும் ஏற்கனவே முடிவடைந்த மூன்று டெஸ்ட் போட்டிகளில் இந்தியா இரண்டு போட்டிகளிலும் ஆஸ்திரேலியா ஒரு போட்டியிலும் வென்று உள்ளது என்பதும் தெரிந்ததே. 
 
இந்த நிலையில் இரு அணிகளுக்கு இடையிலான நான்காவது மற்றும் இறுதி டெஸ்ட் போட்டி நாளை அகமதாபாத் மைதானத்தில் தொடங்க உள்ளது. இந்த போட்டியை நேரில் கண்டு ரசிக்க ஆஸ்திரேலியா பிரதமர் இந்தியா வருகை தர உள்ளார் என்பதும் இந்திய பிரதமர் மோடி மற்றும் ஆஸ்திரேலியா பிரதமர் ஆகிய இருவரும் இந்த போட்டியை பார்க்க உள்ளனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.
 
இந்த நிலையில் நாளை நடைபெற உள்ள போட்டியில் பிரதமர் மோடி டாஸ் போட உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. இந்த தகவல் கிரிக்கெட் ரசிகர்களுக்கு பெரும் ஆச்சரியத்தை ஏற்படுத்தி உள்ளது.
 
Edited by Mahendran

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்