ஆப்கானிஸ்தான் அணிக்கு எதிராக 3 வது ஒருநாள் போட்டியில் வெஸ்ட் இண்டீஸ் வீரர் பந்தை சேதப்படுத்தியுள்ளார். இந்த விவகாரம் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
ஆப்கானிஸ்தான் - வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கு இடையேயான 3 வது ஒருநாள் போட்டி நேற்று முந்தினம் லக்னோவில் நடைபெற்றது.அப்போது, வெஸ்ட் இண்டீஸ் அணி பீல்டிங் செய்து கொண்டிருந்தது. நிக்கோலஸ் பூரன் பந்தை எடுத்து தனது தொடையில் தேய்த்தார்.பந்தில் மேல் பகுதி தேய்ந்து சேதமானது.
இது அங்கிருந்த கேமராவில் பதிவாகியுள்ளது. அவர் மீது நடுவர்கள் குற்றச்சாட்டு கூறியுள்ள நிலையில், அவரை விசாரித்த நடுவர்கள் அடுத்த போட்டிகளில் விளையாட அவருக்குத் தடை விதித்துள்ளனர்.