முதல் பந்திலேயே விராத் கோஹ்லி அவுட்: இந்தியா ஸ்கோர் 125/4

Webdunia
வியாழன், 5 ஆகஸ்ட் 2021 (19:42 IST)
இங்கிலாந்து மற்றும் இந்திய அணிகளுக்கு இடையே முதலாவது டெஸ்ட் போட்டி நேற்று முதல் நடைபெற்று வரும் நிலையில் நேற்று இங்கிலாந்து அணி முதல் இன்னிங்ஸில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 183 ரன்கள் எடுத்திருந்தது என்பது குறிப்பிடத்தக்கது 
இந்த நிலையில் இன்று இந்திய அணி தனது முதல் இன்னிங்சை விளையாடி வரும் நிலையில் தொடக்க ஆட்டக்காரரான ரோகித் சர்மா மற்றும் கேஎல் ராகுல் ஆகியோர் நிதானமாக விளையாடினார்கள்
 
இருப்பினும் ரோகித் சர்மா அவுட் ஆன பின்னர் புஜாரா, விராட் கோலி, ரஹானே ஆகியோர் சொற்ப ரன்களில் அவுட் ஆகினர் என்பது குறிப்பிடத்தக்கது. குறிப்பாக கேப்டன் விராட் கோலி தான் சந்தித்த முதல் பந்திலேயே ரன் ஏதும் எடுக்காமல் அவுட் ஆனது இந்திய வீரர்களுக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது
 
இந்த நிலையில் சற்று முன் வரை இந்திய அணி 4 விக்கெட்டுகளை இழந்து 125 ரன்கள் எடுத்து 58 ரன்கள் பின்தங்கி உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது
 
 

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்