ஹாக்கி வீரர்களுடன் பிரதமர் மோடி உரையாடல்

Webdunia
வியாழன், 5 ஆகஸ்ட் 2021 (17:14 IST)
இன்று நடைபெற்ற ஒலிம்பிக் ஆடவர் ஹாக்கி போட்டியில் இந்திய அணி ஆஸ்திரேலியாவை வீழ்த்தி வெண்கலப் பதக்கம் வென்றது. இதையடுத்து ஹாக்கி வீரர்களுடன் பிரதமர் மோடி உரையாடினார்.

இந்திய ஹாக்கி அணி இன்று நடைபெற்ற வெண்கலப்பதக்கத்திற்கான போட்டியில் ஜெர்மனி அணியை வீழ்த்தி வெண்கலப் பதக்கத்தை வென்றது. இதனை அடுத்து இந்திய அணி வீரர்களுக்கு வாழ்த்துக்கள் குவிந்து வருகிறது என்பதும் பிரதமர் மோடி முக ஸ்டாலின் உள்பட பல்வேறு தலைவர்கள் வாழ்த்து தெரிவித்தனர்.

இந்த நிலையில் இந்திய ஹாக்கி அணியில் உள்ள 8 பஞ்சாப் மாநில வீரர்களுக்கு அம்மாநில அரசு தலா  ரூபாய் ஒரு கோடி பரிசு என அறிவித்துள்ளது.

இநிலையில், ஒலிம்பிக் போட்டியில் 41 ஆண்டுளில் முதல் பதக்கத்தை வென்று சாதித்துள்ளது. எனவே இந்திய பிரதமர் மோடி வீரர்களுடன் தொடர்ப்பு கொண்டு வாழ்த்து தெரிவித்து அவர்களைப் பாராட்டினார்.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்