தொடரும் ஹோம் கிரவுண்ட் சோகம்… மீண்டும் வீழ்ந்த பெங்களூரு அணி!

vinoth

சனி, 19 ஏப்ரல் 2025 (08:01 IST)
நேற்று பெங்களூரு சின்னசாமி மைதானத்தில் நடந்த ஐபிஎல் போட்டி மழைக் காரணமாக தாமதமானதால் 6 ஓவர்கள் குறைக்கப்பட்டு 14 ஓவர்கள் கொண்ட போட்டியாக மாற்றப்பட்டது. இந்த போட்டியில் முதலில் பேட் செய்த பெங்களூர் அணி 14 ஓவர்களில் 9 விக்கெட்களை இழந்து 95 ரன்கள் மட்டுமே சேர்த்தது. அந்த அணியின் டிம் டேவிட்  தவிர மற்ற பேட்ஸ்மேன்கள் அனைவரும் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்தனர்.

இதையடுத்து ஆடிய பஞ்சாப் கிங்ஸ் அணியும் ஆரம்பத்தில் விக்கெட்களை இழந்து தடுமாறியது. இதன் காரணமாக போட்டியை வெல்லும் வாய்ப்பு பெங்களூரு அணிக்கும் உருவானது. ஆனால் சுயாஷ் ஷர்மா வீசிய ஒரு ஓவரில் 24 ரன்கள் சேர்க்கப்பட பஞ்சாப் அணி எளிதாக வெற்றி இலக்கை தொட்டது.

தொடர்ந்து ஹோம் கிரவுண்ட்டான சின்னசாமி மைதானத்தில் நடக்கும் போட்டிகளில் பெங்களூர் அணி தோற்று வருகிறது. இந்த சீசனில் அந்த அணி அடைந்த மூன்று தோல்விகளுமே சொந்த மைதானத்தில்தான் என்பது குறிப்பிடத்தக்கது. 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்