இந்நிலையில் தற்போது தங்கள் சொந்த மைதானத்தில் அதிக தோல்விகளைப் பெற்ற அணி என்ற மோசமான சாதனையையும் படைத்துள்ளது. நேற்று பெங்களூரு சின்னசாமி மைதானத்தில் நடந்த ஐபிஎல் போட்டி மழைக் காரணமாக தாமதமானதால் 6 ஓவர்கள் குறைக்கப்பட்டு 14 ஓவர்கள் கொண்ட போட்டியாக மாற்றப்பட்டது. இந்த போட்டியில் முதலில் பேட் செய்த பெங்களூர் அணி 14 ஓவர்களில் 9 விக்கெட்களை இழந்து 95 ரன்கள் மட்டுமே சேர்த்தது. இந்த இலக்கை 12 ஆவது ஓவரில் துரத்தில் பஞ்சாப் அணி வெற்றி பெற்றது.