இந்திய வீரர்கள் எனக்கு நெஞ்சுவலியை வரவழைக்கின்றனர்… நடுவர் எராஸ்மஸ்!

Webdunia
வியாழன், 6 ஜனவரி 2022 (10:48 IST)
இந்திய அணி தற்போது தென் ஆப்பிரிக்காவில் டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது.

இரண்டாவது டெஸ்ட் போட்டியின் இறுதிக் கட்டத்தில் தென் ஆப்பிரிக்கா அணிக்கு வெற்றி வாய்ப்பு அதிகமாக உள்ள நிலையில் இந்திய பவுலர்கள் ஏதாவது மாயாஜாலம் செய்தால் மட்டுமே இந்தியாவுக்கு வெற்றி என்ற சூழல் உள்ளது. இதனால் இந்திய வீரர்கள் ஒவ்வொரு ஓவருக்கும் இடையிலும் விக்கெட் கேட்டு ஏதாவது அப்பீல் செய்துகொண்டே உள்ளனர். இதுபற்றி பேசியுள்ள கள நடுவர் ‘இந்திய வீரர்கள் அப்பீல் செய்து செய்து எனக்கு நெஞ்சுவலியையே வரவழைத்து விடுவார்கள் போல இருக்கிறது’ என நகைச்சுவையாக கூறியுள்ளார்.
 

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்