மளமளவென விழுந்த 4 விக்கெட்டுக்கள்.. பஞ்சாபுக்கு பெங்களூரு கொடுத்த இலக்கு..!

Webdunia
வியாழன், 20 ஏப்ரல் 2023 (17:32 IST)
ஐபிஎல் தொடரின் இன்றைய போட்டி பெங்களூர் மற்றும் பஞ்சாப் அணிகளுக்கிடையே நடந்து வருகிறது என்பதை பார்த்தோம். இந்த போட்டியில் டாஸ் வென்ற பஞ்சாப் அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்த நிலையில் பெங்களூர் அணி பேட்டிங் செய்தது. 
 
தொடக்க ஆட்டக்காரர்களான விராட் கோலி மற்றும் டூபிளஸ்சிஸ் இருவரும் அபாரமாக விளையாடினார் என்பதும் டூபிளஸ்சிஸ் 84 ரன்களும், விராத் கோஹ்லி 59 ரன்களும் எடுத்தனர் என்பது குறிப்பிடத்தக்கது. 
 
இந்த நிலையில் 136 ரன்கள் வரை விக்கெட் இழப்பின்றி விளையாடி வந்த பெங்களூர் அணி மளமள என நான்கு விக்கெட்டுகளை இழந்தது. இறுதியில் 20 ஓவர்களில் நான்கு விக்கெட் இழப்புக்கு 174 ரன்கள் அடித்தது. 
 
இந்த நிலையில் 175 ரன்கள் என்ற இலக்கை நோக்கி பஞ்சாப் அணி விளையாடி வரும் நிலையில் முதல் ஓவரிலேயே அதர்வா விக்கெட்டை இழந்து உள்ளது. இந்த நிலையில் அந்த அணி தற்போது ஒரு ஓவரில் ஒரு விக்கெட் இழப்பிற்கு  9 ரன்கள் எடுத்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது
 
 
Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்