கடைசி ஓவரில் 19 ரன்கள் தேவை, ஆவேஷ்கான் எடுத்த 2 விக்கெட்.. லக்னோ த்ரில் வெற்றி..!

வியாழன், 20 ஏப்ரல் 2023 (07:39 IST)
நேற்று நடைபெற்ற ஐபிஎல் கிரிக்கெட் போட்டியில் லக்னோ மற்றும் ராஜஸ்தான் அணிகள் விளையாடிய நிலையில் ராஜஸ்தான் அணிக்கு கடைசி ஓவரில் 19 ரன்கள் தேவை என்ற நிலையில் 20வது ஓரை வீசி ஆவேஷ் கான் மிக அபாரமாக பந்துவீசி 2 விக்கெட்டுகளை அடுத்தடுத்து எடுத்து தனது அணீக்கு வெற்றியை தேடி தந்தார். 
 
நேற்றைய போட்டியில் முதலில் பேட்டிங் செய்த லக்னோ அணி 20 ஓவர்களில் ஏழு விக்கெட் இழப்பிற்கு 154 ரன்கள் எடுத்தது. 155 என்ற எளிய இலக்கை நோக்கி ராயல் ராஜஸ்தான் அணி விளையாட நிலையில் அந்த  அணியின் தொடக்க ஆட்டக்காரர்கள் ஜெய்ஸ்வால் மற்றும் ஜாஸ் பட்லர் நல்ல தொடக்கத்தை கொடுத்தனர். இருவரும் 44 மற்றும் 40 ரன்கள் எடுத்த நிலையில் அதற்கு அடுத்து வந்த கேப்டன் சஞ்சு சாம்சன் இரண்டு ரன்கள் மட்டுமே எடுத்தார். அதன் பிறகு வந்த பேட்ஸ்மேன்கள் அனைவரும் சொதப்பிய காரணத்தினால் 20 ஓவர்களில் ராஜஸ்தான் 144 ரன்கள் மட்டுமே எடுத்து தோல்வி அடைந்தது 
 
குறிப்பாக கடைசி ஓவரில் ராஜஸ்தான் வெற்றிக்கு 19 ரன்கள் தேவை என்ற நிலையில் முதல் பந்தில் நான்கு அடித்ததால் ராஜஸ்தான் ரசிகர்களுக்கு நம்பிக்கை ஏற்பட்டது. ஆனால் மூன்றாவது பந்தில் ஒரு விக்கெட் நான்காவது பங்கத்தில் ஒரு விக்கெட் எடுத்ததை அடுத்து தோல்வி உறுதி செய்யப்பட்டது. 
 
நேற்றைய வெற்றியின் மூலம் லக்னோ அணி 8 புள்ளிகள் உடன் இரண்டாவது இடத்தில் உள்ளது என்பதும் தோல்வி அடைந்தாலும் ராஜஸ்தான் அணி முதல் இடத்தில் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
 
Edited by Siva

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்