டி20 ஓவர் போட்டியை தொடர்ந்து டி10 அறிமுகம்

Webdunia
புதன், 4 அக்டோபர் 2017 (13:49 IST)
டி20 கிரிக்கெட் போட்டிகளுக்கு ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு கிடைத்ததை அடுத்து தற்போது டி10 ஓவர் போட்டிகள் நடத்தப்பட உள்ளது.


 

 
கிரிக்கெட் டெஸ்ட் மற்றும் 50 ஓவர் கொண்ட ஒருநாள் போட்டிகளை விட தற்போது நடைபெறும் டி20 போட்டிகளுக்கே நல்ல வரவேற்பு உள்ளது. இதனால் அனைத்து நாடுகளும் ஒருநாள் போட்டியை விட டி20 போட்டிகளை நடத்துவதில் கவனம் செலுத்தி வருகிறது. 
 
இந்நிலையில் தற்போது டி20 ஓவர் போட்டிகளையும் கடந்து டி10 போட்டிகள் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. ஐக்கிய அரபு எமிரேட்ஸ் நாட்டின் மிகப்பெரிய தொழிலதிபரான ஷாஜி உல் முல்க் எடுத்த முயற்சிக்கு எமிரேட்ஸ் கிரிக்கெட் போர்டு கிரீன் சிக்னல் கொடுத்துள்ளது.
 
இந்த முயற்சிக்கு இலங்கை வங்கதேச கிரிக்கெட் வாரியங்களுடன் சேர்ந்து ஐசிசியும் அனுமதி வழங்கிவிட்டது. இதனால் கிரிக்கெட் விளையாடும் நாடுகளைச் சேர்ந்த வீரர்கள் டி10 போட்டியில் பங்கேற்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
 
இந்தியாவில் டி20 ஐபில் போட்டிகள் நடப்பது போல் ஐக்கிய அரபு நாடுகளில் டி10 போட்டிகள் நடக்க உள்ளது. ஷார்ஜாவில் வரும் டிசம்பர் 21ஆம் தேதி முதல் 24ஆம் தேதி வரை நடக்கும் போட்டியில் ஆறு அணிகள் பங்கேற்க உள்ளன. அணிகளை தேர்வு செய்யும் பணி இந்த மாதம் நடைபெற உள்ளது.
 
இலங்கை முன்னாள் கேப்டன் குமார் சங்ககாரா, பாகிஸ்தான் முன்னாள் கேப்டன் ஷாகித் அப்ரிடி, இந்தியாவின் அதிரடி மன்னன் சேவாக் ஆகியோர் தூதர்களாக செயல்பட உள்ளனர். விரைவில் சர்வசேத அளவில் டி20 போட்டிகள் சர்வதேச அணிகளிடையே நடைபெற வாய்ப்புள்ளது.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்