கூண்டோடு ராஜினாமா! அதிர்ச்சியில் இலங்கை கிரிக்கெட் அணி

Webdunia
செவ்வாய், 29 ஆகஸ்ட் 2017 (22:16 IST)
இலங்கை கிரிக்கெட் அணிக்கு கடந்த சில நாட்களாக நேரம் சரியில்லை. போலும். சொந்த மண்ணில் ஜிம்பாவே அணியிடம் அடி வாங்கிய இலங்கை அணி தற்போது இந்தியாவிடமும் டெஸ்ட் மற்றும் ஒருநாள் போட்டியில் தொடரை இழந்தது



 
 
தொடர் தோல்வி காரணமாக 3வது ஒருநாள் போட்டியில் ரசிகர்கள் ரகளையில் ஈடுபட்டதும் தெரிந்ததே. இந்த நிலையில் தொடர் தோல்விக்கு பொறுப்பேற்று தேர்வுக்குழுவின் தலைவர் பதவியில் இருந்து ஜெயசூர்யா ராஜினாமா செய்ததாக தகவல்கள் வெளிவந்துள்ளது.
 
அதுமட்டுமின்றி தேர்வுக்குழு உறுப்பினர்கள் 5 பேர்களும் இந்திய அணியின் சுற்றுப்பயணம் முடிந்தவுடன் ராஜினாமா செய்யவுள்ளதாக தகவல்கள் வெளிவந்துள்ளது. இதன் காரணமாக இலங்கை கிரிக்கெட் வீரர்கள் அதிர்ச்சியில் உறைந்துள்ளனர். மிக விரைவில் அணியில் களையெடுப்பு அதிகளவில் இருக்கும் என்று கூறப்படுகிறது.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்