ஆசியக் கிரிக்கெட் கவுன்சில் தலைவர் மோஷின் நக்வி அறிவித்துள்ளபடி, ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடர் ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெறுகிறது.
வரும் செப்டம்பர் 9 முதல் 28 ஆம் தேதி வரை இந்த தொடர் நடைபெறும். அடுத்த ஆண்டு டி20 உலக கோப்பை வருவதால், இம்முறை ஆசிய கோப்பை டி20 வடிவில் நடத்தப்படவுள்ளது. துபாய் மற்றும் அபுதாபியில் போட்டிகள் நடைபெறும் நிலையில், இந்தியாவின் ஆட்டங்கள் அனைத்தும் துபாயில் நடக்கின்றன.
அணிகளின் பிரிவுகள் மற்றும் முக்கிய ஆட்டங்கள்:
ஆசியக் கோப்பையில் பங்கேற்கும் அணிகள் இரு பிரிவுகளாகப் பிரிக்கப்பட்டுள்ளன:
குரூப் ஏ: இந்தியா, பாகிஸ்தான், ஐக்கிய அரபு அமீரகம், ஓமன்.
குரூப் பி: இலங்கை, வங்கதேசம், ஆப்கானிஸ்தான், ஹாங்காங்.
கிரிக்கெட் ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்க்கும் இந்தியா - பாகிஸ்தான் போட்டி செப்டம்பர் 14 ஆம் தேதி துபையில் நடைபெறவுள்ளது. சூப்பர் 4 சுற்றில், செப்டம்பர் 21 ஆம் தேதி இந்த இரு அணிகளும் மீண்டும் மோதி கொள்ள வாய்ப்புள்ளது.
இந்தியாவின் போட்டி அட்டவணை:
செப்டம்பர் 10: இந்தியா vs ஐக்கிய அரபு அமீரகம்
செப்டம்பர் 14: இந்தியா vs பாகிஸ்தான்
செப்டம்பர் 19: இந்தியா vs ஓமன்
ஆசியக் கோப்பை இறுதிப் போட்டி செப்டம்பர் 28 ஆம் தேதி நடைபெறவுள்ளது.