ப்ரீ பாஸ் வாங்கி ஃபைனல்ஸ் போறதுக்கு பதிலா… - இந்தியாவை சீண்டிய கேப்டன்!

Webdunia
சனி, 7 மார்ச் 2020 (10:39 IST)
உலக டி20 பெண்கள் கிரிக்கெட்டில் இந்திய அணி இறுதி போட்டிக்கு தகுதி பெற்றிருப்பது குறித்து தென் ஆப்பிரிக்க கேப்டன் பேசியுள்ளது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

பெண்களுக்கான உலக கோப்பை டி20 போட்டிகள் ஆஸ்திரேலியாவில் பரபரப்பாக நடைபெற்று வருகின்றன. லீக் ஆட்டங்கள் முடிவில் ஏ பிரிவிலிருந்து இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா, பி பிரிவிலிருந்து இங்கிலாந்து மற்றும் தென் ஆப்பிரிக்கா அணிகள் அரையிறுதிக்கு முன்னேறின.

அரையிறுதியில் இங்கிலாந்துடன் இந்தியா மோத இருந்த நிலையில் மழையால் ஆட்டம் ரத்தானது. அதனால் தரவரிசை அடிப்படையில் இந்திய அணி இறுதி ஆட்டத்திற்கு நேரடியாக தகுதி பெற்றது. இதே போன்று ஆஸ்திரேலியா – தென் ஆப்பிரிக்கா இடையேயான ஆட்டத்திலும் மழை குறுக்கிட்டது. ஆஸ்திரேலியா முதலில் பேட்டிங் செய்தது. இரண்டாவதாக தென் ஆப்பிரிக்கா விளையாட இருந்த நேரத்தில் மழை பெய்தது. ஆனாலும் மைதான ஊழியர்கள் முயற்சியால் சீக்கிரமே மைதானம் தயாரானதால் இரண்டாவதாக பேட்டிங் இறங்கிய தென் ஆப்பிரிக்காவுக்கு 13 ஓவர்களுக்கு 98 ரன்கள் வெற்றி இலக்காக நிர்ணயிக்கப்பட்டது.

ஆனாலும் தென் ஆப்பிரிக்க ஆஸ்திரேலியாவிடம் தோல்வியடைந்தது. இந்தியா ஆட்டத்தை போல தொடர்ந்து மழை பெய்திருந்தால் தென் ஆப்பிரிக்காவும் தகுதி அடிப்படையில் இறுதி ஆட்டத்திற்கு தகுதி பெற்றிருக்கும்.

இதுகுறித்து தென் ஆப்பிரிக்க கேப்டன் வான் நீகெர்க்கிடம் கேட்டபோது ”ப்ரீ பாஸ் மூலம் இறுதி ஆட்டத்திற்கு செல்வதை விட தோற்பது மேலானது. எதிர்காலத்தில் அரையிறுதி மற்றும் இறுதி ஆட்டங்களுக்கு ரிசர்வ் டே தேவை” என்று கூறியுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்