நேற்றைய போட்டியில் லக்னோ மற்றும் மும்பை இந்தியன்ஸ் ஆகிய அணிகள் மோதின. இந்த போட்டி கடைசி வரை பரபரப்பான ஒன்றாக சென்று முடிந்தது. இந்த போட்டியில் முதலில் பேட் செய்த லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணி 20 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட்களை இழந்து 203 ரன்கள் சேர்த்தது. அதையடுத்து ஆடிய மும்பை இந்தியன்ஸ் அணி 191 ரன்கள் மட்டுமே சேர்த்து 12 ரன்கள் வித்தியாசத்தில் தோற்றது. இந்த தொடரில் இது மும்பை அணியின் மூன்றாவது தோல்வியாகும்.
இந்த போட்டியில் ஹர்திக் பாண்ட்யா சில தவறான முடிவுகளை எடுத்தார். அதுதான் அந்த அணியின் தோல்விக்குக் காரணமாக அமைந்தது. ஆனால் அவருக்கு ஆறுதலான ஒரு விஷயமும் நடந்தது. இந்த போட்டியில் அவர் 36 ரன்கள் விட்டுக்கொடுத்து 5 விக்கெட்கள் வீழ்த்தினார். ஐபிஎல் தொடரில் 5 விக்கெட்களை வீழ்த்திய முதல் கேப்டன் ஹர்திக் பாண்ட்யாதான் என்பது குறிப்பிடத்தக்கது.