திலக் வர்மாவை வெளியே போக சொன்ன ஹர்திக்.. தோல்விக்கே அதுதான் காரணம்... திட்டித் தீர்க்கும் ரசிகர்கள்!

vinoth

சனி, 5 ஏப்ரல் 2025 (07:52 IST)
18 ஆவது சீசன் ஐபிஎல் தொடரில் நேற்றைய போட்டியில் லக்னோ மற்றும் மும்பை இந்தியன்ஸ் ஆகிய அணிகள் மோதின. இந்த போட்டி கடைசி வரை பரபரப்பான ஒன்றாக சென்று முடிந்தது. இந்த போட்டியில் முதலில் பேட் செய்த லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணி 20 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட்களை இழந்து 203 ரன்கள் சேர்த்தது.

அதன் பின்னர் ஆடிய மும்பை அணி இலக்கை நெருங்கி வந்தாலும் கடைசி கட்டத்தில் 12 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியைத் தழுவியது. இந்த போட்டியில் நமன் திர் மற்றும் சூர்யகுமார் யாதவ் ஆகியோர் சிறப்பாக விளையாடியும்,கடைசி வரை ஹர்திக் பாண்ட்யா களத்தில் இருந்தும் அந்த அணியால் வெல்ல முடியவில்லை.

இந்நிலையில் இந்த போட்டியில் மும்பை அணி எடுத்த ஒரு தவறான முடிவுதான் அவர்களின் தோல்விக்குக் காரணமாக அமைந்தது என ரசிகர்கள் புலம்பி வருகின்றனர். அது என்னவென்றால் வழக்கமாக அதிரடியாக ஆடும் திலக் வர்மா இந்த போட்டியில் பந்தை கனெக்ட் செய்ய முடியாமல் போராடினார். அவர் 23 பந்துகளில் 25 ரன்கள் மட்டுமே எடுத்திருந்தார். அதனால் அவரை 19 ஆவது ஓவரில் ரிட்டையர்ட் ஹர்ட் முறையில் வெளியே அனுப்பிவிட்டு, மிட்செல் சாண்ட்னரை இறக்கினர். இதுதான் கடைசி ஓவரில் 22 ரன்கள் தேவை என்ற நிலையில் மும்பை அணிக்கு பின்னடைவாக அமைந்து விட்டது என விமர்சனங்கள் எழுந்துள்ளன.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்