வருகிற மார்ச் மாதம் 29 ஆம் தேதி, 13 ஆவது ஐபிஎல் போட்டிகள் தொடங்கவுள்ள நிலையில், முதல் போட்டியில் சென்னை மற்றும் மும்பை அணிகள் மோதினர். இந்திய அணியின் முன்னாள் கேப்டனும் சென்னை அணியின் கேப்டனுமாகிய தோனி பல மாதங்களாக கிரிக்கெட் போட்டிகளில் கலந்துக்கொள்ளாத நிலையில், இந்த ஐபிஎல் போட்டிகளில் விளையாடவுள்ளார்.
தோனியின் ஆட்டத்தை காண அவரது ரசிகர்கள் உற்சாகத்துடன் எதிர்பார்த்துக் கொண்டிருக்கின்றனர். இந்நிலையில் சென்னை சேப்பாகம் மைதானத்தில் தோனி பயிற்சி எடுத்துக்கொண்டிருந்த போது, 5 பந்துகளில் 5 சிக்ஸர்கள் வெளுத்த வீடியோ ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது. இதனை ஸ்டார் ஸ்போர்ட்ஸ் தமிழ் தனது அதிகாரப்பூர்வ டிவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளது.