ஆரம்பத்திலேயே இந்திய அணி இரண்டு முக்கிய விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது. கேப்டன் ஷுப்மன் கில் 9 ரன்களுக்கு ஆட்டமிழந்தார். அவரை தொடர்ந்து களமிறங்கிய விராட் கோஹ்லி ரன் எதும் எடுக்காமல் 'டக் அவுட்' ஆனார். ஏற்கனவே முதல் ஒருநாள் போட்டியிலும் விராட் கோலி டக் அவுட் ஆன நிலையில், இரண்டாவது போட்டியிலும் அவர் ரன் ஏதும் எடுக்காமல் ஆட்டமிழந்தது ரசிகர்களுக்கு பெரும் ஏமாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.
இருப்பினும், தொடக்க ஆட்டக்காரர் ரோஹித் ஷர்மா 29 ரன்களுடனும், அவரை தொடர்ந்து களமிறங்கிய ஷ்ரேயஸ் ஐயர் 20 ரன்களுடனும் களத்தில் நிலைத்து ஆடி வருகின்றனர்.