மழை காரணமாக 26 ஓவர்களாக குறைக்கப்பட்ட இந்த போட்டியில், முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி 9 விக்கெட் இழப்பிற்கு 136 ரன்கள் எடுத்தது. இந்திய அணியில் அதிகபட்சமாக கே.எல். ராகுல் 38 ரன்களும், அக்சர் படேல் 31 ரன்களும் எடுத்தனர்.
இந்த நிலையில், மீண்டும் மழை குறுக்கிட்டதால், டக்வொர்த் லூயிஸ் முறைப்படி ஆஸ்திரேலியா அணிக்கு 21 ஓவர்களில் 131 ரன்கள் என்ற இலக்கு நிர்ணயிக்கப்பட்டது. அந்த அணி 21 ஓவர்களில் 3 விக்கெட் இழப்பிற்கு 131 ரன்கள் எடுத்து, 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.