இந்தியா ஆஸ்திரேலியா டி 20 போட்டி… 95,000 டிக்கெட்களும் விற்பனை!

செவ்வாய், 7 அக்டோபர் 2025 (09:28 IST)
இந்திய அணி ஓய்வு ஒழிச்சல் இலலாமல் தொடர்ந்து கிரிக்கெட் போட்டிகளில் விளையாடி வருகிறது. தற்போது வெஸ்ட் இண்டீஸுக்கு எதிரான டெஸ்ட் தொடரில் பங்கேற்று வரும் நிலையில் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக அக்டோபர் 19-ஆம் தேதி பெர்த்தில் தொடங்கவுள்ள மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடர் மற்றும் மூன்று போட்டிகள் கொண்ட டி 20 தொடரில் விளையாடவுள்ளது.

ஒருநாள் தொடருக்கு ஷுப்மன் கில்லும், டி 20 தொடருக்கு சூர்யகுமார் யாதவ்வும் தலைமையேற்கின்றனர். இந்நிலையில் அக்டொபர் 31 ஆம் தேதி மெல்போர்னில் நடக்கவுள்ள டி 20 போட்டிக்கான டிக்கெட்கள் அனைத்தும் விற்றுத் தீர்ந்துள்ளன. மெல்போர்ன் மைதானம் மொத்தம் 95000 இருக்கைகள் கொண்டது என்பது குறிப்பிடத்தக்கது.

டி20 தொடரை பொருத்தவரை, முதல் போட்டி அக்டோபர் 29 அன்று கேன்பராவில் நடக்கவுள்ளது. இரண்டாவது டி20 போட்டி அக்டோபர் 31 அன்று மெல்போர்ன் கிரிக்கெட் மைதானத்திலும், அதைத் தொடர்ந்து நவம்பர் 2, 6, மற்றும் 8 ஆகிய தேதிகளில் முறையே ஹோபார்ட், கோல்ட் கோஸ்ட் மற்றும் பிரிஸ்பேன் ஆகிய நகரங்களில் அடுத்த மூன்று டி20 போட்டிகளும் நடைபெற உள்ளன.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்