சர்வதேச போட்டிக்கு திரும்பிய விராட் கோலி, பெர்த்தில் நடந்த முதல் ஒருநாள் போட்டியில் ரன் ஏதும் எடுக்காமல் ஆட்டமிழந்தார். இந்நிலையில், அக்டோபர் 23 அன்று அதாவது நாளை அடிலெய்டு ஓவலில் நடைபெறும் இரண்டாவது போட்டியில், எம்.எஸ். தோனியின் சாதனையை முறியடிக்க அவருக்கு ஒரு வாய்ப்பு கிடைத்துள்ளது.
கோலிக்கு சவால் அளிக்கும் வகையில், அவருக்கு 6 முறை தொல்லை கொடுத்த சுழற்பந்து வீச்சாளர் ஆடம் ஜம்பா, அடிலெய்டு போட்டியில் அணிக்குள் திரும்புகிறார். இருப்பினும், அதிக ஒருநாள் ரன்கள் குவித்த ஆஸ்திரேலியா அல்லாத வீரர்கள் பட்டியலில் முன்னேறவும் கோலிக்கு ஒரு வாய்ப்பு உள்ளது.