டாஸ் வென்ற ஆஸ்திரேலியா எடுத்த அதிரடி முடிவு.. தொடரை இழக்காமல் தடுக்குமா இந்தியா?

Siva

வியாழன், 23 அக்டோபர் 2025 (08:55 IST)
இந்தியா மற்றும் ஆஸ்திரேலியாவுக்கு இடையேயான மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் கிரிக்கெட் தொடரின் இரண்டாவது போட்டி இன்று தொடங்குகிறது. சற்று முன்னர் போடப்பட்ட டாஸில் ஆஸ்திரேலிய அணி வெற்றி பெற்று, முதலில் பந்துவீச்சை தேர்வு செய்துள்ளது. இதை தொடர்ந்து, இந்திய அணி இன்னும் சில நிமிடங்களில் பேட்டிங் செய்யக் களமிறங்க உள்ளது.
 
ஏற்கனவே இந்தத் தொடரின் முதல் போட்டியில் இந்திய அணி தோல்வியடைந்துள்ளதால், இந்த போட்டியிலும் தோல்வியடைந்தால் தொடரை இழந்திடும் அபாயம் உள்ளது. இதனால், தொடரை இழக்காமல் இருக்கவும், தொடரை சமன் செய்யவும் இந்திய வீரர்கள் இன்று மிகவும் உத்வேகத்துடன் விளையாடுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
 
இரண்டாவது ஒருநாள் போட்டியில் களம் காணும் இரு அணிகளின் வீரர்கள் பட்டியல் கீழே கொடுக்கப்பட்டுள்ளது:
 
ஆஸ்திரேலிய அணி
 
1 மிட்செல் மார்ஷ்(கேப்டன்)
2 டிராவிஸ் ஹெட்  
3  மேத்யூ ஷார்ட்
4 மேத்யூ ரென்ஷா
5 அலெக்ஸ் கேரி(விக்கெட் கீப்பர்)
6 கூப்பர் கொனோலி
7 மிட்செல் ஓவன்
8 சேவியர் பார்ட்லெட்
9 மிட்செல் ஸ்டார்க்
10 ஆடம் ஜாம்பா
11 ஜோஷ் ஹேசில்வுட்
 
இந்திய அணி 
 
1 ஷுப்மன் கில்(கேப்டன்)
2 ரோஹித் ஷர்மா
3 விராட் கோலி
4 ஷ்ரேயஸ் ஐயர்
5 அக்ஷர் படேல்
6 கே.எல். ராகுல்(விக்கெட் கீப்பர்)
7 வாஷிங்டன் சுந்தர்
8 நித்திஷ் குமார் ரெட்டி
9 ஹர்ஷித் ராணா
10 அர்ஷ்தீப் சிங்
11 முகமது சிராஜ்
 
இந்த ஆட்டத்தில் இந்திய அணி முதலில் பேட் செய்ய உள்ளதால், ஒரு வலுவான இலக்கை நிர்ணயித்து, ஆஸ்திரேலியாவுக்கு அழுத்தம் கொடுக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. கேப்டன் ஷுப்மன் கில் மற்றும் ரோஹித் ஷர்மாவின் தொடக்கம் இன்று இந்திய அணிக்கு மிக முக்கியப் பங்காற்றும்.

Edited by Siva
 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்