டெல்லி அணியின் கேப்டன் ஸ்ரேயாஸ் அய்யருக்கு ரூ.12 லட்சம் அபராதம் விதிப்பு! ஏன் தெரியுமா?

Webdunia
புதன், 30 செப்டம்பர் 2020 (09:07 IST)
ஐபிஎல் தொடரின் 11வது போட்டி நேற்று நடைபெற்ற நிலையில் நேற்றைய போட்டியில் ஹைதராபாத் மற்றும் டெல்லி அணிகள் மோதின. இந்த போட்டியில் முதலில் பேட்டிங் செய்த ஹைதராபாத் அணி 4 விக்கெட் இழப்பிற்கு 162 ரன்கள் எடுத்தது. 163 ரன்கள் என்ற இலக்கை நோக்கி விளையாடிய டெல்லி அணி 7 விக்கெட் இழப்பிற்கு 147 ரன்கள் மட்டுமே எடுத்ததால் ஹைதராபாத் அணி 15 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. அதுமட்டுமின்றி புள்ளிகள் பட்டியலில் அந்த அணி ஆறாவது இடத்திற்கு முன்னேறியது என்பது குறிப்பிடத்தக்கது 
 
இந்த நிலையில் நேற்றைய போட்டியில் டெல்லி அணியின் கேப்டன் ஸ்ரேயாஸ் அய்யருக்கு ரூபாய் 12 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. ஐதராபாத் அணிக்கு எதிராக நேற்று நடைபெற்ற போட்டியில் பந்து வீச அதிக நேரம் எடுத்துக் கொண்டதாக டெல்லி அணிக்கு கேப்டனாக இருக்கும் ஸ்ரேயாஸ் அய்யருக்கு 12 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டதாக நடுவர்கள் அறிவித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது
 
நேற்றைய தோல்வியின் மூலம் டெல்லி அணி முதலிடத்தை இழந்து இரண்டாவது இடத்திற்கு தள்ளப்பட்ட நிலையில் டெல்லி கேப்டனுக்கு அபராதமும் விதிக்கப்பட்டது அவ்வணியின் ரசிகர்களை அதிர்ச்சி அடைய செய்துள்ளது

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்