ஐபிஎல் -2020 ; டெல்லி அணிக்கு 163 ரன்கள் இலக்கு நிர்ணயித்த ஹைதராபாத் !

செவ்வாய், 29 செப்டம்பர் 2020 (21:29 IST)
ஐபிஎல் கிரிக்கெட் போட்டிகள் கடந்த சில நாட்களாக நடைபெற்று வரும் நிலையில் இன்று டெல்லி மற்றும் ஹைதராபாத் அணிகள் மோதி வருகின்றன.
 


டெல்லி அணியின் பந்துவீச்சாளர் இஷாந்த் சர்மா காயம் அடைந்திருந்த நிலையில் அவர் தற்போது குணமாகி விட்டதால் இன்றைய போட்டியில் விளையாடுகிறார். அவருக்கு பதிலாக அணியில் இருந்து அவெஷ்கான் நீக்கப்பட்டுள்ளார்

. டெல்லி அணி தான் விளையாடிய இரண்டு போட்டிகளிலும் வெற்றி பெற்று முதலிடத்தில் உள்ளது என்பதும், ஐதராபாத் அணி தான் விளையாடிய இரண்டு போட்டிகளிலும் தோல்வி அடைந்து கடைசி இடத்தில் உள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில்,சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணி 20 ஓவர்கள் முடிவில் 163 ரன்கள் எடுத்து,
டெல்லி கேபிட்டல்ஸ் அணிக்கு 163 ரன்களை இலக்காக நிர்ணயித்தது சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணி

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்