இந்த தொடர் என் கனவுத்தொடர் – ரிஷப் பண்ட் உருக்கம்!

Webdunia
செவ்வாய், 19 ஜனவரி 2021 (16:46 IST)
ஆஸ்திரேலியாவுக்கு எதிரான தொடரை வென்றுள்ள நிலையில் இந்திய விக்கெட் கீப்பர் ரிஷப் பண்ட் வாழ்வின் முக்கியமானத் தருணம் எனக் கூறியுள்ளார்.

இன்று பிரிஸ்பேனில் நடந்து முடிந்த பரபரப்பான டெஸ்ட் போட்டியில் வரலாற்று சிறப்புமிக்க வெற்றியைப் பெற்ற இந்திய அணி பார்டர் கவாஸ்கர் கோப்பையை இரண்டாவது முறையாக வென்றுள்ளது. மேலும் 32 ஆண்டுகளாக பிரிஸ்பென் காபா மைதானத்தில் தோல்வி அடையாத ஆஸ்திரேலியாவை வென்று வரலாற்று சாதனை படைத்துள்ளது. இந்த வெற்றிக்கு இந்திய அணியின் இளம் வீரர்களான ரிஷப் பண்ட், சுப்மன் கில்,உள்ளிட்டோர் மிக முக்கியமானக் காரணமாக அமைந்தனர்.

மூன்றாவது மற்றும் நான்காவது டெஸ்ட் போட்டிகளின் நான்காவது இன்னிங்ஸில் சிறப்பாக விளையாடி மேட்ச் வின்னராக ஜொலித்தார் ரிஷப் பண்ட். இந்நிலையில் இன்றைய வெற்றிக்குப் பிறகு ’ என் வாழ்க்கையில் முக்கியமான தருணமாக இந்த வெற்றி இருக்கும். நான் பார்மில் இல்லாத போது எனக்கு ஆதரவாக இருந்த அனைவருக்கும் நன்றி. என் வாழ்க்கையில் மிகப்பெரிய தருணமாக இந்த வெற்றி இருக்கும். நான் அணிக்குள் வந்ததும் என்னை அணிக்குள் முக்கியமானவானகவும், மேட்ச் வின்னராகவும் உணரச் செயதனர். இந்திய அணியை வெல்ல வைக்க வேண்டும் என ஒவ்வொரு நாளும் நினைப்பேன். அது இன்று நிறைவேறியுள்ளது.’ எனக் கூறியுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்