”தம்பி.. நியூஸிலாந்து கீழ இறங்குப்பா” மீண்டும் முதலிடத்தில் இந்தியா! – ஐசிசி தரவரிசை!

செவ்வாய், 19 ஜனவரி 2021 (13:31 IST)
ஆஸ்திரேலியா உடனான டெஸ்ட் ஆட்டத்தில் வெற்றிப்பெற்றதை தொடர்ந்து மீண்டும் தரவரிசையில் முதலிடத்தை இந்திய அணி பிடித்துள்ளது.

இந்தியா – ஆஸ்திரேலியா இடையேயான சுற்றுப்பயண ஆட்டங்கள் இந்தியாவில் நடந்து வந்தது. இந்தில் 4 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் இந்தியா விளையாடி வந்த நிலையில் முதல் இரு ஆட்டங்களில் 1-1 என்ற சமநிலையில் இரண்டு அணிகளும் இருந்த நிலையில் மூன்றாவது ஆட்டம் ட்ரா ஆனது.

இதனால் நான்காவது டெஸ்ட் போட்டி பெரிதும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருந்தது. நேற்று மழையால் பாதிக்கப்பட்ட இரண்டாவது இன்னிங்ஸ் இன்று தொடங்கப்பட்ட நிலையில் அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்திய இந்தியா 3 விக்கெட் வித்தியாசத்தில் ஆஸ்திரேலியாவை வென்றது.

இதுவரை ஐசிசி தரவரிசை பட்டியலில் நியூஸிலாந்து அணி முதலிடம் வகித்து வந்தது. இந்நிலையில் ஆஸ்திரேலியாவை இந்தியா வென்றதன் மூலம் மீண்டும் ஐசிசி தரவரிசையில் முதலிடத்தை இந்தியா பிடித்துள்ளது. நியூஸிலாந்து இரண்டாம் இடத்திற்கு தள்ளப்பட்டுள்ளது.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்