சாதனையும் நானே, சோதனையும் நானே! பெங்களூரு அணியின் ஒற்றை இலக்க எண் சாதனை

Webdunia
திங்கள், 24 ஏப்ரல் 2017 (05:57 IST)
தற்போது நடைபெற்று வரும் 10வது ஐபிஎல் தொடர் போட்டியில் பெங்களூரு அணி நேற்று பரிதாபமாக தோல்வி அடைந்தது என்பதை பார்த்தோம். கொல்கத்தா அணிக்கு எதிராக 132 ரன்கள் என்ற சுலப இலக்கை விரட்டிய பெங்களூர் அணி வெறும் 48 ரன்கள் மட்டுமே எடுத்து ஆல்-அவுட் ஆனது. இந்த போட்டித்தொடரில் எடுக்கப்பட்ட குறைந்த ரன்கள் இதுதான் என்பது குறிப்பிடத்தக்கது.




 

 
கடந்த சில நாட்களுக்கு முன்னர் குஜராத் அணிக்கு எதிராக விளையாடிய பெங்களூர் அணி 213 ரன்கள் எடுத்து இந்த போட்டிதொடரின் அதிக ரன்களை குவித்த அணி என்ற சாதனை பெயரெடுத்த பெங்களூர் தற்போது சோதனை பெயரையும் எடுத்துள்ளது.
 
அதுமட்டுமின்றி பெங்களூர் அணியின் ஒரு பேட்ஸ்மேன் கூட இரட்டை இலக்க ரன்கள் எடுக்கவில்லை. கெயில் 7, கோலி 0, மந்தீப் சிங் 1, டிவில்லியர்ஸ் 8, கேதார் ஜாதவ் 9, பின்னி 8, நெகி 2, பத்ரி 0, மில்ஸ் 2, சஹால் 0 ரன்கள் எடுத்து அவுட்டாகினர். அரவிந்த் மட்டும் 5 ரன்களுடன் அவுட்டாகாமல் இருந்தார். இந்த படுதோல்வியை மறக்க பெங்களூர் அணிக்கு நீண்ட காலம் ஆகும் என்பது குறிப்பிடத்தக்கது.
 
அடுத்த கட்டுரையில்