அகம்பாவம் பிடித்த பெங்களூருக்கு அதிர்ச்சி வைத்தியம் செய்த கொல்கத்தா

Webdunia
ஞாயிறு, 23 ஏப்ரல் 2017 (23:24 IST)
ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் இன்று கொல்கத்தா மற்றும் பெங்களூர் அணிகளுக்கு இடையே கொல்கத்தாவில் உள்ள ஈடன் கார்டன் மைதானத்தில் விறுவிறுப்பான போட்டி நடைபெற்றது. டாஸ் வென்ற பெங்களூர் அணி முதலில் பந்து வீச முடிவு செய்ததால் கொல்கத்தா முதலில் களம் இறங்கியது.



 


கொல்கத்தா அணி பேட்ஸ்மேன்கள் ஆரம்பத்தில் அதிரடி காட்டினாலும் பின்னர் அடுத்தடுத்து விக்கெட்டுக்கள் விழுந்ததால் அந்த அணி 19.3 ஒவர்களில் அனைத்து விக்கெட்டுக்களையும் இழந்து 131 ரன்கள் மட்டுமே எடுத்தது. 5 ஓவர்களில் 60 ரன்கள் எடுத்திருந்த கொல்கத்தாவை 131 ரன்களுக்குள் ஆல்-அவுட் செய்துவிட்டதால் பெங்களூர் வீரர்கள் அகம்பாவத்தில் ஆடினர்.

ஆனால் பெங்களூர் அணி பேட்டிங் செய்யும்போது ஆரம்பமே அதிர்ச்சி காத்திருந்தது. முதல் பந்திலேயே கேப்டன் விராத் கோஹ்லி ஆட்டமிழந்தார். இதனையடுத்து கெய்லே, உள்பட அனைத்து பேட்ஸ்மேன்களும் சிங்கிள் டிஜிட் ரன்களில் ஆட்டமிழந்து 8.3 ஓவர்களில் 8 விக்கெட்டுக்களை இழந்து வெறும் 44 ரன்கள் மட்டுமே எடுத்து தத்தளித்தனர். கடைசியில் 49 ரன்களுக்கு பெங்களூர் அனைத்து விக்கெட்டுக்களையும் இழந்து படுதோல்வி அடைந்தனர்.
அடுத்த கட்டுரையில்