புரோ கபடி: தமிழ் தலைவாஸ் அணி தொடர் தோல்வி: ரசிகர்கள் அதிருப்தி

Webdunia
வெள்ளி, 12 அக்டோபர் 2018 (08:21 IST)
இந்த ஆண்டுக்கான புரோ கபடி தொடர் போட்டி கடந்த சில நாட்களாக நடைபெற்று வரும் நிலையில் முதல் போட்டியில் மட்டுமே வெற்றி பெற்ற தமிழ் தலைவாஸ் தொடர்ச்சியாக மூன்று தோல்விகள் அடைந்த நிலையில் நேற்று நடந்த பெங்கால் அணிக்கு எதிரான போட்டியிலும் தோல்வி அடைந்துள்ளது. தமிழ் தலைவாஸ் அணியின் தொடர் தோல்வியால் ரசிகர்கள் அதிருப்தி அடைந்துள்ளனர்.

நேற்று நடைபெற்ற பெங்கால் மற்றும் தமிழ் தலைவாஸ் அணிகளுக்கு இடையிலான போட்டியிலும் தமிழ் தலைவாஸ் அணி ஆரம்பம் முதலே புள்ளிகளில் பின்வாங்கியே இருந்தது. இறுதியில் 27க்கு 36 என்ற புள்ளிகள் கணக்கில் பெங்கால் வாரியர்ஸ் அணி வெற்றி பெற்றது. 9 புள்ளிகள் பெற்று அந்த அணியில் மணிந்தர் சிங் தனது அணியின் வெற்றிக்கு உதவினார். இந்த நிலையில்

தமிழ் தலைவாஸ் அணி தினமும் விளையாடி வருவதால் உடலளவில் சோர்வாகி உள்ளனர் என்றும் ஒரு காரணமாக கூறப்படுகிறது. போட்டி ஆரம்பித்த ஐந்து நாட்களிலும் ஐந்து போட்டிகளில் தமிழ் தலைவாஸ் அணி விளையாடியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

நேற்று நடைபெற்ற இன்னொரு ஆட்டத்தில் பாட்னா அணி, உத்தரபிரதேச அணியை 43 க்கு 41 என்ற புள்ளி கணக்கில் வீழ்த்தியது என்பது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்