ராஜஸ்தான் ராயல்ஸ் அணியில் சஞ்சு சாம்சனுக்கும் டிராவிட்டுக்கும் இடையில் மோதலா?

vinoth

செவ்வாய், 22 ஏப்ரல் 2025 (07:49 IST)
நடப்பு ஐபிஎல் தொடரில் புள்ளிப்பட்டியில் கீழ் வரிசையில் இருக்கும் அணிகளில் ஒன்றாக உள்ளது ராஜஸ்தான் ராயல்ஸ். அந்த அணி இதுவரை விளையாடிய 8 போட்டிகளில் இரண்டில் மட்டுமே வென்று ஆறு போட்டிகளில் தோற்றுள்ளது.

அந்த அணியின் சஞ்சு சாம்சன் தலைமைப் பொறுப்பை ஏற்று வழிநடத்தினாலும் இந்த தொடரில் காயம் காரணமாக நான்கு போட்டிகளில் அவருக்குப் பதிலாக ரியான் பராக்தான் கேப்டனாக செயல்பட்டார்.

இந்நிலையில் அந்த அணியின் கேப்டன் சஞ்சு சாம்சனுக்கும் தலைமைப் பயிற்சியாளர் ராகுல் டிராவிட்டுக்கும் இடையே மோதல் எழுந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. கடந்த போட்டியின் போது டிராவிட் நடத்திய அணி வீரர்கள் கூட்டத்தில் சஞ்சு கலந்துகொள்ளவில்லை என்றும் சொல்லப்படுகிறது.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்