ருத்துராகுக்குப் பதில் தோனி கேப்டனான பின்னர் சி எஸ் கே அணி ஒரு போட்டியில் வெற்றியும் மூன்று போட்டிகளில் தோல்வியும் பெற்றுள்ளது. சி எஸ் கே அணியின் இந்த நிலைக்குக் காரணம் மாறிவரும் டி 20 போட்டிகளின் ஆட்டம் பற்றி சி எஸ் கே அணி புரிந்துகொள்ளாமல் மந்தமாகப் பேட்டிங் செய்வதுதான் என்று விமர்சனங்கள் எழுந்துள்ளன.
இந்நிலையில் சென்னை அணியின் செயல்பாடு குறித்து அதன் தலைமை செயல் அதிகாரி காசி விஸ்வநாதன் நம்பிக்கையாகப் பேசியுள்ளார். அதில் “இதுவரையிலான சென்னை அணியின் செயல்பாடு ரசிகர்களுக்கு திருப்தியாக இருந்திருக்காது எனத் தெரியும். ஆனால் அதுதான் கிரிக்கெட். இனி வரும் போட்டிகளில் சிறப்பாக விளையாட முயற்சிப்போம். 2010 ஆம் ஆண்டு இதே போல தொடர் தோல்விகளுக்குப் பிறகுதான் மீண்டெழ்ந்து கோப்பையை வென்றோம். அதே போல இந்த ஆண்டும் சி எஸ் கே அணி வெல்லும் என்ற நம்பிக்கை உள்ளது.” எனப் பேசியுள்ளார்.