என்னைப் பற்றி வதந்திகளிலேயே அது சிரிப்பை வரவழைப்பது- மனம் திறந்த தோனி!

vinoth

செவ்வாய், 22 ஏப்ரல் 2025 (17:18 IST)
கடந்த சில ஆண்டுகளாக சி எஸ் கே அணி ரசிகர்களைப் பொறுத்தவரை அணி வெற்றி பெறுகிறதோ இல்லையோ, தோனி கடைசியாக ஒரு சிக்ஸர் அடித்து விட்டால் ‘பைசா வசூல்’ எனக் கொண்டாடி மகிழ்ந்தனர். ஆனால் இந்த சீசனில் தோனிதான் தோல்விகளுக்குக் காரணமாக இருக்கிறார் என்று சொல்லுமளவுக்கு ஆதங்கத்தில் உள்ளனர்.

இதனால் அவர் ஓய்வு பெறவேண்டும் என்று ரசிகர்களே இப்போது அறிவுரை சொல்ல ஆரம்பித்துவிட்டனர். ஆனால் தோனியைக் காரணமாகக் காட்டிதான் சி எஸ் கே போட்டிக்கான டிக்கெட் விற்பனை ஜரூராக நடந்து கொண்டிருக்கிறது என்பது பலரும் அறிந்த ஒன்று. தற்போது சென்னை போட்டிக்கான டிக்கெட் விற்பனையும் சரிந்துள்ளது.

இந்நிலையில் தோனி அவர் கலந்துகொண்ட நிகழ்ச்சி ஒன்றில் தோல்வியின் அழுத்தங்கள் இல்லாமல் மனம் திறந்து நகைச்சுவையாகப் பேசியுள்ளார். அதில் “உங்களைப் பற்றி வெளிவந்த வதந்திகளிலேயே நம்பவே முடியாத ஒன்று என எதை சொல்வீர்கள்?” எனக் கேட்கப்பட்டது. அதற்கு தோனி “நான் தினமும் 5 லிட்டர் பால் குடிப்பேன் எனப் பரவிய தகவல்தான்” எனக் கூறியுள்ளார்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்