தமிழ்நாடு கிரிக்கெட் சங்கத்தின் தலைவராக அமைச்சரின் மகன் போட்டியின்றி தேர்வு
தமிழ்நாடு கிரிக்கெட் சங்கத்தின் தலைவராக தமிழக அமைச்சரின் மகன் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
தமிழக கிரிக்கெட் சங்க தலைவராக அமைச்சர் பொன்முடியின் மகன் அசோக் சிகாமணி தேர்வு பெற்றுள்ளார். தலைவருக்கான தேர்தல் இன்று நடைபெறவிருந்த நிலையில் அமைச்சர் பொன்முடியின் அசோக் சிகாமணி மற்றும் பிரபு ஆகிய இருவரும் போட்டியிட்டனர்
ஆனால் கடைசி நேரத்தில் பிரபு தனது மனுவை வாபஸ் பெற்றதை அடுத்து தமிழ்நாடு கிரிக்கெட் சங்கத்தின் தலைவராக அசோக் சிகாமணி போட்டியின்றி தேர்வாகியுள்ளார். மேலும் தமிழ்நாடு கிரிக்கெட் சங்கத்தின் செயலாளராக பழனி தேர்வாகி உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது
மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவின் மகன் ஜெய்ஷா பிசிசியின் செயலாளராக தேர்வு செய்யப்பட்டதை திமுகவினர் கடும் எதிர்ப்பு தெரிவித்த நிலையில் தற்போது தமிழ்நாடு கிரிக்கெட் சங்கத்தின் தலைவராக அமைச்சரின் மகன் தேர்வு செய்யப்பட்டு இருப்பதை அடுத்து அவருக்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது